Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரிட்டன் பிணைக் கைதியான ஜோன் கன்ட்லியே தொடர்பான 3 ஆவது வீடியோவையும் தமக்கு எதிரான சர்வதேசத்தின் தாக்குதலுக்கு எதிராக ISIS வெளியிட்டுள்ளது.

'Lend me your ears' என்ற தலைப்புடன் 5 1/2 நிமிடங்கள் நீடிக்கும் இவ்வீடியோவில் 43 வயதான கன்ட்லியே ஆரஞ்சு நிற சட்டையணிந்து பேசும்படி அமைந்துள்ளது. தான் மிக நீண்ட காலமாக சிறைக் கைதியாக இருப்பதாகப் பேசும் போது தெரிவித்துள்ள இவர் அமெரிக்காவின் விமானத் தாக்குதல்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் இரு வருடங்களுக்கு முன் இவர் ISIS ஆல் கைப்பற்றப் பட்டிருந்தார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ISIS இயக்கத்தில் கடந்த சில வாரங்களாகக் குறிப்பிட்டளவு இந்தியர்கள் இணைந்திருப்பதாகவும் சில கிழமைகளுக்கு முன் கனடாவில் இருந்து ISIS உடன் இணைந்து கொண்ட அபு முஸ்லிம் என்ற இளைஞரது வாழ்க்கை குறித்த பிரச்சார வீடியோவும் இணையத்தில் வெளியாகி இருந்தது. இதேவேளை ஈராக்கில் தலைநகர் பக்தாத்தில் இருந்து 2 Km தொலைவு வரை ISIS போராளிகள் சிலர் நெருங்கியிருப்பதாகவும் இவர்கள் பக்தாத்தை முற்றுகையிட தீவிர தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடும் என்றும் சில செய்திகள் தெரிவிக்கின்றன.

மறுபுறம் அமெரிக்க மற்றும் நட்பு நாடுகளின் விமானத் தாக்குதல்களில் சிரியாவிலும் ஈராக்கிலும் குறிப்பிட்டளவு பொது மக்களும் பலியாகி இருப்பதாக பிரிட்டனைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தில் வட சிரியாவின் மான்பிஜ் நகரினைத் தாக்கிய அமெரிக்க ஏவுகணையின் மூலம் பொது மக்களுக்கு உணவு கொண்டு செல்லும் இரு தொண்டர்கள் பலியானதாகவும் இதில் கட்டடம் ஒன்றின் உள்ளே இருந்த IS போராளிகளும் கூடப் பலியாகி இருந்ததாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த வாரம் முதற்கொண்டு சிரியாவில் வான் தாக்குதலை ஆரம்பித்திருந்த அமெரிக்கா மற்றும் நட்பு அரபு நாடுகளின் கூட்டு விமானத் தாக்குதலில் இதுவரை 19 பொது மக்கள் கொல்லப் பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to பிரிட்டன் பிணைக் கைதியான ஜோன் கன்ட்லியே தொடர்பான 3 ஆவது வீடியோவை வெளியிட்டது ISIS

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com