Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்க வாழ் இந்திய வம்சாவழியர்களுக்கு இந்தியாவில் நிரந்தர
குடியுரிமைக்கான விசா வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி
உறுதியளித்துள்ளார்.

ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நரேந்திர மோடிக்கு,
அங்குள்ள இந்தியர்கள் நேற்று சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
நியூயார்க்கில் உள்ள மேடிசன் அரங்கத்திற்கு நரேந்திர மோடிக்கு வரவேற்பு
ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. முன்னதாக இந்திய பாரம்பரிய நடனங்கள்
குச்சுப்புடி உளிட்டவை அரங்கேற்றம் செய்யப்பட்டன. பாடகி ஒருவர்
பாடிக்கொண்டு இருக்க,அமெரிக்கர் ஒருவர் நரேந்திர மோடியின் உருவப்படத்தை
மேடையில் உடனடியாக வரைந்து பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
பின்னர் மோடி மேடை ஏறியவுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

அடுத்ததாக சுமார் 20 ஆயிரம் பேர் மத்தியில் மோடி மிக எழுச்சியாக
உரையாற்றினார். அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு, இந்தியாவில்
வேலைவாய்ப்புக்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று
கூறினார். முன்பெல்லாம் அமெரிக்க வாழ் வம்சாவழியினர் இந்தியாவுக்கு வந்து
அதிக நாட்கள் தங்கினால் காவல்நிலையம் அங்கு இங்கு என்று அலைய
வேண்டியதிருக்கும் என்றும், இனி அப்படியிறாமல் அவர்களுக்கு நிரந்தர விசா
வழங்கப்படும் என்றும் மோடி உறுதி அளித்துள்ளார். மோடியின் உரை மிக
எழுச்சி மிக்கதாக இருந்தது என்று அமெரிக்க வாழ் இந்தியர்கள் சிலாகித்துப்
பேசியுள்ளனர்.

இந்நிலையில் இன்று இரவு ஒபாமாவை சந்திக்க வெள்ளை மாளிகை செல்லவுள்ள மோடி,
அங்கு ஒபாமா அளிக்கும் இரவு விருந்தில் கலந்துக்கொள்ள உள்ளார் என்றாலும்,
மோடி தசரா கால உண்ணா நோன்பை கடைபிடித்து வருவதால், அவருக்கு இதற்கான
சிறப்பு விருந்தையும், நோன்பை கவுரவிக்கும் வகையில் சிறப்பு விருது
ஒன்றையும் வழங்க ஒபாமா திட்டமிட்டு உள்ளாராம்.

0 Responses to அமெரிக்க வாழ் இந்திய வம்சாவழியர்களுக்கு இந்தியாவில் நிரந்தர குடியுரிமை: மோடி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com