Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசியல் ரீதியாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை தொடர்பில் சட்டமா அதிபருடன் பேசி கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்திற்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை விஜயம் செய்த சட்டமா அதிபர் பாலித பெர்ணான்டோவிற்கும், வடக்கு மாகாண முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் என்ன விடயங்கள் பேசப்பட்டன என்று கொழும்பு ஊடகமொன்று கருத்துக் கேட்ட போதே வடக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சட்டமா அதிபருடனான இச்சந்திப்பு அவர் எனது நண்பர் என்ற ரீதியில் இடம்பெற்றது. இதன்போது அரசியல் ரீதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளோரதும், கைதிகளதும் அவல நிலை குறித்தும் விவாதித்தோம். பாரிய குற்றங்களில் ஈடுபட்டவர்களில் அமைச்சர்களாகவும், ஓரளவு குற்றத்தில் ஈடுபட்டவர்கள் இன்னும் சிறைகளில் வாடுகின்றமை தொடர்பிலும் மனிதநேய அடிப்படையில் கலந்துரையாடினோம்.

இவ்வாறு சிறைகளில் வாடுபவர்களது உளநலம் பாதித்து வாழ்க்கையில் நம்பிக்கையிழந்தவர்களாக காணப்படுகின்றனர் என்பதை சுட்டிக்காட்டினேன். இவற்றை செவிமடுத்த சட்டமா அதிபர் இவ்விடயம் தொடர்பில் சட்டவல்லுனர்களும் பேசுயுள்ளதாகவும், இது தொடர்பில் சட்டத்திற்கு உட்பட்டு முடிந்தவற்றை செய்வதாக அவர் என்னிடம் தெரிவித்தார்” என்றுள்ளார்.

0 Responses to அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சட்டமா அதிபரிடம் பேசினேன்: சி.வி.விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com