Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பதுளை ஹல்துமுல்ல மீரியபெத்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியிலுள்ள மக்களை அப்புறப்படுத்தி அவர்களுக்கு வேறு இடங்களில் வீடுகள் அமைத்துக் கொடுக்குமாறு 2011ஆம் ஆண்டே தோட்ட நிர்வாகத்துக்கு அறிவித்த போதும் தோட்ட நிர்வாகம் இதனை பொருட்படுத்தவில்லை என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாயம் உள்ள இடங்களை அடையாளம் கண்டு அந்தந்த பகுதிகளிலுள்ள மக்களை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்படி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

குறிப்பிட்ட ஹல்துமுல்ல பகுதியிலுள்ள லயன் குடியிருப்புகளை அப்புறப்படுத்தி வேறு பகுதிகளில் அவர்களைக் குடியமர்த்துமாறு தோட்ட நிர்வாகத்துக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் 2011ஆம் ஆண்டு தெரிவித்திருந்தது.

இதனை ஏன் தோட்ட நிர்வாகம் பொருட்படுத்தவில்லை என்பது பற்றி பெருந்தோட்டத்துறை அமைச்சின் செயலாளர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்” என்றுள்ளார்.

0 Responses to மீரியபெத்த மண்சரிவு; 2011இல் எச்சரிக்கை விடுத்தும் தோட்ட நிர்வாகம் பொருட்படுத்தவில்லை: மஹிந்த சமரசிங்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com