Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டெல்லியில் ஆட்சி அமைப்பதுத் தொடர்பாக டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீத் ஜங், இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியதாகத் தெரிய வருகிறது.

டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கும் அளவிற்கு அதிக இடங்களைக் கைப்பற்றி இருந்த போதிலும், அப்போது ஆட்சி அமைக்க மறுத்ததால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லியில் பாஜக ஆட்சி செய்யலாம் என்று குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தத்தை அடுத்து, உச்ச நீதிமன்றம் நஜீத் ஜங்குக்கு, டெல்லியில் ஆட்சியமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவும் பிறப்பித்துள்ளது.

இதையடுத்து நஜீத் ஜங், டெல்லியில் பாஜக ஆட்சி அமைப்பதுக் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க டெல்லி அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

0 Responses to டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீத் ஜங் அனைத்து கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com