Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் ஜெயக்குமாரியின் விடுதலையை வலியுறுத்தி எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெறவிருந்த நிலையில், பிரஜைகள் குழுவின் தலைவர் கி.தேவராசா நேற்று புதன்கிழமை இரவு 07.30 மணியளவில் தாக்கப்பட்டுள்ளார்.

இனந்தெரியாதோரால் தாக்கப்பட்ட அவர் தற்போது நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கி.தேவராசா தெரிவித்துள்ளதாவது, “வவுனியாவில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றை முடித்துவிட்டு நெடுங்கேணியில் உள்ள எனது கடையை மூடிவிட்டு வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது நெடுங்கேணிக்கும் பெரியகுளத்திற்கும் இடைப்பட்ட வயல்வெளிப் பிரதேசத்தில் வைத்து நான் தாக்கப்பட்டேன்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வரில் இருவர் என்னை சிறிய கால்வாய் ஒன்றினுள் தள்ளி இரும்புக் கம்பிகளால் தாக்கினர். இதன் காரணமாக எனது கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, என்னை தாக்கிய இரும்புக் கம்பிகளில் ஒன்றையும் எடுத்துக் கொண்டு நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோது அவர்கள் வைத்தியசாலைக்கு செல்லுமாறு தெரிவித்தனர். அதன்பின்னரே நான் நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். அத்துடன் பொலிஸார் என்னிடம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்” என்றுள்ளார்.

இதனிடையே, வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் மீதான தாக்குதல் கொலை முயற்சியே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

0 Responses to வவுனியா பிரஜைகள் குழு தலைவர் மீது தாக்குதல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com