சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் உள்ளிட்ட நால்வரும் தாக்கல் செய்திருந்த பிணை மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் சற்றுமுன்னர் நிராகரித்துள்ளது.
ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை பல்வேறு ஊழல் வழக்குகளை மேற்கோள் காண்பித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சந்திர சேகர், ஊழலுக்கு எதிரான நடவடிக்கையின் படி குற்றங்களை மறைத்து, தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது எனக் குறிப்பிட்டு, ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் ஜாமீன் மனுவை ரத்து செய்துள்ளார்.
இனி ஜாமீன் மனுத் தாக்கல் செய்ய அவர்கள் உச்ச நீதிமன்றத்துக்குத்தான் செல்ல வேண்டும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் அதிகமாக வாதாடாமல், நிபந்தனை ஜாமீன் வழங்கலாம் என்று கூறிய ஒரே காரணத்தினால் வெளியில் கூடியிருந்த வழக்கறிஞர்கள் ஜாமீன் கிடைத்தது எனத் தவறான் தகவலை வெளியிட, அது அதிமுக தொண்டர்களின் கொண்டாட்டங்களுக்கு வித்திட்டுவிட்டது எனவும் தெரிய வருகிறது.

0 Responses to ஜெயலலிதாவின் பிணை மனு நிராகரிப்பு!