Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி கிறிஸ் நோனிஸ், தன்னுடைய பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து வெளிவிவகார அமைச்சிடம் இராஜினாமாக் கடிதத்தை கையளித்துள்ளார்.

இலண்டனில் இருக்கும் அவர், இராஜினாமா கடிதம் கையளிப்பு தொடர்பில் இலங்கையின் முன்னணி ஊடகமொன்றிடம் இன்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி கிறிஸ் நோனிஸ், அமெரிக்காவின் நியூயோர்க்கில் வைத்து வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினரான சஜின் வாஸ் குணவர்த்தனவினால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தாக்குதல் சம்பவம் நடைபெற்று ஒரு வாரத்துக்கும் அதிகமான காலமாகியுள்ள போதிலும், அரசாங்கத் தரப்பிலிருந்து விசாரணைகள் ஏதும் இன்னமும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. இந்த நிலையிலேயே, கிறிஸ் நோனிஸ் இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.

0 Responses to பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவர் தனது இராஜினாமாக் கடிதத்தை கையளித்துள்ளார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com