சிறிலங்கா தொடர்பிலான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ வெளியிட்டிருந்த கருத்து போலியானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை சந்தித்திருந்த போது, இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு மென்மைப்படுத்தப்பட்டதாக ஜோன் கெரி தமக்கு தெரிவித்ததாக, சிறிலங்காவின் ஜனாதிபதி அமைச்சரவையில் அறிவித்திருந்தார்.
எனினும் இது உண்மையான தகவல் இல்லை என்று அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ஜேன் பிசாகி தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கொள்கையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை என்பதையும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to சிறிலங்கா தொடர்பில் அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் என்ற ராஜபக்சவின் கருத்துப் போலியானது – அமெரிக்கா