புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும், சிறிலங்காவின் ஜனாதிபதிக்கும் இடையில் இரகசியத் தொடர்புகள் இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் ரணில்விக்ரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
அண்மையில் ரணில் விக்ரமசிங்க லண்டன் சென்று, அங்குள்ள புலம்பெயர்ந்த அமைப்புகளின் உறுப்பினர்களைச் சந்தித்ததாகவும், இதன் அடிப்படையிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியதாகவும் அரசாங்கம் குற்றம் சுமத்தி வந்தது.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ரணில், ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ அமெரிக்கா சென்றிருந்த போது, அவர் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்ததாக ரணில் கூறியுள்ளார்.
அவர் யார் யாரை சந்தித்து என்னென்ன விடயங்களை பேசினார் என்பது தொடர்பில் விரைவாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் ரணில் கோரி இருக்கிறார்.
இவ்விவகாரம் குறித்து கொழும்பில் இருந்து வெளிவரும் இன்னிபென்டன் நாளிதல் வெளியிட்டு செய்தி:-
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிப்பை தடுத்து தேர்தலில் வெற்றி பெற்றது போல், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அதேபோன்ற முயற்சியில் ராஜபக்ஷவினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு 180 மில்லியன் ரூபாவை வடக்கு மக்களை தேர்தலை புறக்கணிக்க செய்து, ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளை தடுத்து மகிந்த ராஜபக்ஷ அந்த தேர்தலில் வெற்றி பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 745 மில்லியன் ரூபாவுக்கு மேல் பெறுமதியான கொடுக்கல் வாங்கல் ஒன்றுக்கு ராஜபக்ஷ அரசாங்கம் தயாராகி வருவதாக தெரியவருகின்றது.
கிளிநொச்சியில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ,பிரிவினைவாத ஈழ கோரிக்கை இருக்கும் வரை நிறைவேற்று அதிகாரத்தை கைவிட போவதில்லை என தெரிவித்திருந்ததுடன் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப் புலிகளின் தடையை நீக்கியதன் பின்னணியில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரசிங்க இருப்பதாகவும் குற்றம் சுமத்தினார்.
இவ்வாறு குற்றம் சுமத்திய மகிந்த ராஜபக்ஷ தனி நாடு கோரி நிற்கும் பிரதான அமைப்பொன்றின் முக்கியஸ்தருடன் இந்த புதிய கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த முறை விடுதலைப் புலிகளுடனான கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ள எமில் காந்தன் என்பவரை சந்திக்க சிங்கள பத்திரிகை ஒன்றின் உரிமையாளர் ஒருவரை பயன்படுத்தியது போல், ராஜபக்ஷவினர் இம்முறை கசினோ வர்த்தகரான ரவி விஜேரத்னவை இணைத்து கொண்டுள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கான நிலக்கரி விநியோகிக்கும் ஒப்பந்தத்தை ரவி விஜேரத்ன பெற்றிருந்தார்.
இதற்காக அவர் வேறு நிலக்கரி உற்பத்தியாளர்களிடம் இருந்து விலை மனுக்களை கோரியிருந்தார்.
சிங்கப்பூர், அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்க வர்த்தகர்கள் விலை மனுக்களை சமர்பித்தனர். சாதகமான விலை மனுவை சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று முன்வைத்தது.
எனினும் அரசாங்க அதிகார தரப்பினர் அழுத்தங்கள் காரணமாக ரவி விஜேரத்ன அந்த வர்த்தகத்தை தென் ஆபிரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கினார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெறுவதற்காகவே இந்த வர்த்தகம் தென் ஆபிரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பதாக கூறி அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த தென் ஆபிரிக்க உப ஜனாதிபதி சிறில் ராமபோஷாவே குளோபல் ரிசோசஸ் என்ற இந்த தென் ஆபிரிக்க நிறுவனத்தின் உரிமையாளர்.
ராமபோஷா என்பவர் தென் ஆபிரிக்காவின் செல்வந்த குபேரர். 675 மில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களை அவர் கொண்டுள்ளார்.
மேலே குறிப்பிட்ட தனிநாடு கோரும் பிரதான அமைப்பொன்றின் பிரதானியிடம் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே சிறில் ராமபோஷாவின் நிறுவனத்திற்கு நிலக்கரி விநியோக உரிமை வழங்கப்பட்டது.
சிறில் ராமபோஷாவின் நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக இந்த பிரதானி பணியாற்றி வருகிறார். இந்த கொடுக்கல் வாங்கல்கள் மூலம் இந்த பிரதானியின் வங்கி கணக்கில் பெருந் தொகை பணம் வைப்புச் செய்யப்படும்.
கடந்த முறை கொடுக்கப்பட்ட பணத்தை விட பல மடங்கான இந்த பணமானது நீண்டகால வருமானம் பெறும் வழியாகவும் அமைந்துள்ளது.
இதனடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை மகிந்த ராஜபக்ஷவுக்கு பெற்று தருவதாக மேற்படி பிரதானி வாக்குறுதியளித்துள்ளார்.
இந்த கொடுக்கல் வாங்கல் காரணமாக ரவி விஜேரத்ன பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாக கூறப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் விடுதலைப் புலிகளுக்கு விதித்திருந்த தடையை நீக்கியதுடன் அதற்கு எதிராக அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது அமைதியாக இருந்து வருவதுடன் தடையை மீண்டும் அமுல்படுத்தும் எந்த முனைப்புகளையும் அரசாங்கம் இதுவரை மேற்கொள்ளவில்லை.
இதனால், இதனை அரசாங்கம் வேண்டும் என்றே செய்தது என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருவதுடன் குறித்த கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான முதலாவது கட்ட நடவடிக்கையாக இது இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற புலிகளுக்கு பணத்தை கொடுத்து எப்படி வழியை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது என்பதை மௌபிம பத்திரிகையின் உரிமையாளரான நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் விளக்கியுள்ளார்.
அவர் கூறுகையில்,
நான் எமில் காந்தனை, பசில் ராஜபக்ஷவுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அப்போதில் இருந்து ஜனாதிபதித் தேர்தலில் புலிகளின் ஆதரவை மகிந்த ராஜபக்ஷவுக்கு எப்படி பெற்றுக்கொடுப்பது என்பது பற்றியே இவர்கள் பேசி வந்தனர்.
2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நெருங்கும் தருவாயில் மகிந்தவின் வெற்றியை உறுதிப்படுத்த புலிகள் தரப்பில் ஏதாவது செய்ய வேண்டும் என பசில் ராஜபக்ஷ,எமில் காந்தனிடம் கூறியதுடன் அவர்கள் கேட்கும் எதனையும் கொடுக்க தயார் என்றும் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கில் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்பட்டால், தென் பகுதி வாக்குகளால் மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெறுவார் என்றும் பசில் கூறியிருந்தார்.
மறுதினம் எங்களுக்கு ஏதாவது வேண்டுமா என்று கேட்டீர்கள் தானே என்று எமில், பசிலிடம் கூறினார். எமக்கு படகுகள் சிலவற்றை கொள்வனவு செய்ய 180மில்லியன் ரூபா தேவை என எமில் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த பசில் ராஜபக்ஷ எந்த பிரச்சினையும் இல்லை பணத்தை எங்களால் தர முடியும் என்று தெரிவித்தார்.
அதற்கு மறுநாள் எமிலும் பசிலும் சந்தித்தனர். எமிலை சந்திக்க வந்த பசில் தன்னுடன் சில பயண பொதிகளை எடுத்து வந்திருந்தார்.
நான் இவற்றை தற்போது கூறுவதற்கு முன்னர் இந்த தகவல்களை 2007 ஆம் ஆண்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளேன்.
என்னை கொலை செய்ய ராஜபக்ஷவினர் முயற்சித்து வருவதன் காரணமாகவே நான் தற்போது இந்த தகவல்களை வெளியிடுகிறேன்.
புலிகளின் உறவை உறுதிப்படுத்திக் கொள்ளவே பசில் ராஜபக்ஷ அப்போது 180 மில்லியன் ரூபாவை வழங்கினார் என டிரான் அலஸ் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to அமெரிக்க புலம்பெயர் தமிழ் அமைப்புக்கும் மகிந்தவுக்கும் இடையில் கொடுக்கல் வாங்கலாம்!!