ஜனாதிபதித் தேர்தலின் போது தனது தேர்தல் செலவுகளுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழீழ விடுதலைப் புலிகளின் பணத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி சந்தேகம் வெளியிட்டுள்ளது.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஐரோப்பிய நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பெருமளவு சொத்துக்கள் இருக்கின்றன. அதைக் கருத்தில் கொண்டுதான் ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீது தடையை இரத்து செய்ததை அரசாங்கம் கண்டும் காணாமல் இருக்கின்றது.
ஏனெனில், அரசாங்கத்தோடு இருக்கின்ற புலிகளின் முன்னாள் தலைவர்களான கே.பி மற்றும் கருணா அம்மான் உள்ளிட்டோரைக் கொண்டு அந்தச் சொத்துக்களைப் பெற்றுக் கொள்ளவும், அதனை தேர்தல் பிரசாரங்களின் போது பயன்படுத்தவும் முயற்சிக்கலாம்.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போதே விடுதலைப் புலிகளின் பணத்தினை தேர்தல் பிரசாரங்களின் போது பயன்படுத்தியிருந்ததாக அப்போது அரசாங்கத்தில் அங்கம் வகித்திருந்த மங்கள சமரவீர மற்றும் மறைந்த சிறீபதி சூரியாராச்சி ஆகியோர் தெரிவித்திருந்தனர்” என்றுள்ளார்.

0 Responses to ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷ புலிகளின் பணத்தைப் பயன்படுத்தலாம்: ஐ.தே.க