Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுவதால், 309 குடும்பங்களைச் சேர்ந்த 1278 பேர் அவர்களின் சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பதுளை ஹல்துமுல்ல மீரியபெத்தையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட மண்சரிவினால் 200க்கும் அதிகமானோர் காணாமற்போயுள்ளதுடன், 10 பேர் உயிரிழந்துள்ளதாக இதுவரை உறுதிப்படுத்தப்படுள்ளது. இந்த நிலையிலேயே, நுவரெலியாவில் பாதுகாப்பற்ற இடங்களிலிருந்து மக்களை வெளியேற்றியுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டி.பி.ஜி.குமாரசிரி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பலாங்கொடை ஓலுகங்தொட்ட ரைவத்தை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது இன்று வெள்ளிக்கிழமை மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அத்திவாரமொன்றை வெட்டிக்கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

0 Responses to மண்சரிவு அபாயம்; நுவரெலியாவில் 309 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com