Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புலம்பெயர் தமிழ் மக்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படுமாயின், அவர்களினால் நாட்டிற்கு பாரிய சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரவு – செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான நேற்றைய விவாதத்தில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தைக் கூறினார்.

    வெளிநாட்டவர்கள் வடக்கிற்கு செல்வதற்கு அனுமதி பெற வேண்டும் என்பதால், அவர் வடக்கிற்கு செல்வதை பெரிதும் தவிர்த்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, இன்னமும் தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முடியாத மக்களுக்கு, புலம்பெயர் தமிழ் அமைப்பினரும், வெளிநாட்டு அமைப்பினரும் தற்போது பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். இத்தகைய உதவி புரியும் அமைப்பினர் வடக்கிற்கு செல்வதற்கு பெரிதும் கஷ்ட நிலை இருக்கின்றது.  புலம்பெயர் தமிழ் மக்களை இலக்கு வைத்த இந்த அனுமதி முறையானது உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சும் அரசாங்கமும் உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும். புலம்பெயர் தமிழ் மக்களுக்கும் இந்த இரட்டை பிரஜாவுரிமையை வழங்கினால், அவர்களும் தங்களுடைய நாட்டில் தங்களின் சேவையை புரியும் நிலை ஏற்படும்.

இதேவேளை, வரவு – செலவுத் திட்டங்களின் ஊடாக நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், அந்த நிதி உரியமுறையில் பயன்படுத்தப்படுவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டுகின்றது.

வரவு-செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    2012ஆம் ஆண்டளவிலே பாடசாலை மாணவர்களுக்கான பாதணி கொள்வனவு நிதி ஒதுக்கீடுகள் வரவு-செலவுத்திட்டத்திலே ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பாடசாலை மாணவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. பாடசாலை மாணவர்கள் பாதணி அற்ற நிலையில், அந்த பாடசாலைக்கு செல்வதை கூட நாங்கள் காண்கின்றோம். ஆகவே வரவு-செலவுத்திட்டம் என்ற வகையிலே ஒதுக்கீடுகள் காட்டப்படுகின்றது. அந்த வரவு செலவுத்திட்டம் எந்தளவில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்றால், கேள்வி குறியாகவே இருக்கின்றது. ஒரு சமுதாயத்தின் அடிப்படை கல்வியை ஊட்டுகின்றவர்கள் அந்த பாலர் பாடசாலை ஆசிரியர்கள். ஆகவே அவர்களது வேதனம் கட்டாயமாக 10 ஆயிரத்திற்கு மேலே கொடுக்கப்பட வேண்டும். அதற்கு விசேடமாக அரசாங்கம் அந்த பாலர் பாடசாலைகளை அரசாங்க பாடசாலைகளாக உள்வாங்க வேண்டும். அவ்வாறு அவர்களுக்கு சலுகை ஏற்படுத்தி அந்த ஆரம்ப கட்ட கல்வியை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

0 Responses to புலம்பெயர் தமிழர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட வேண்டும்: விஜயகலா கோரிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com