ராஜிவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி முன் விடுதலை கோரி தாக்கல் செய்திருந்த மேன்முறையீ்ட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி எச்.எல்.தத்து முன்னிலையில் நேற்று இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தள்ளுபடி செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரித்த வழக்கில், தண்டனை பெற்றுள்ள ஒருவரை சிறையிலிருந்து முன்விடுதலை செய்ய மாநில அரசுக்கு, மத்திய அரசின் அனுமதி தேவை என்ற குற்றவியல் நடைமுறை சட்டத்தினை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஆயுள் தண்டனை கைதிகளை தமிழக அரசு முன்விடுதலை வழங்கியபோதிலும், தமது வழக்கில் மத்திய அரசிடம் அனுமதி கோருவது அரசியலமைப்பிற்கு விரோதமானது என நளினி தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
வேலூர் மகளிர் சிறப்பு சிறைச்சாலையில் 23 வருடங்களாக தாம் சிறைத்தண்டனை அனுபவித்துவருவதாகவும், நளினி முருகன் தனது மனுவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to நளினியின் மேன்முறையீட்டு மனு தள்ளுபடி