கடந்த 20ம் திகதி காணாமற்போன வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான கலியுகமூர்த்தி சுகந்தி (வயது 36) என்பவரே நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து மேலும் தெரிய வருவது,
கடந்த 20ம் திகதி குறித்த பெண் தனது வீட்டிலிருந்து புறப்பட்டு பருத்தித்துறையிலுள்ள நண்பியின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
எனினும் மறுநாள் வரையில் அவர் வீடு திரும்பாததையடுத்து அப்பெண்ணின் கணவன் 21ம் திகதி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண் நேற்று உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் விறகு வெட்டுவதற்காகச் சென்ற சிலர் அங்கிருந்த பெண்ணின் சடலத்தைக் கண்டு நெல்லியடி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அங்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Responses to வடமராட்சியில் உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு