Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தன்னைக் கற்பழிக்க முயன்ற காமுகனைக் கொலை செய்த குற்றத்துக்காக பெண் ஒருவருக்கு இன்று சனிக்கிழமை தூக்குத் தண்டனை நிறைவேற்றியுள்ளது ஈரான் என அந்நாட்டு உள்நாட்டு ஊடகமான IRNA அறிவித்துள்ளது.

இப்பெண்ணினது செயல் குற்றமல்ல என்றும் தற்காப்புக்காகவே அவர் கொலை செய்ய நேர்ந்துள்ளது எனவும் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரானின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைச்சின் முன்னால் ஊழியரான மோர்டெஷா அப்டொலாலி சர்பன்டி என்பவர் 2007 ஆம் ஆண்டு 26 வயதுடைய ரெய்ஹானெஹ் ஜப்பாரி எனும் பெண்ணைக் கற்பழிக்க முயற்சித்த போது தற்காப்புக்காக அப்பெண் அந்நபரைக் கொலை செய்திருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஐ.நா சபை கூறியுள்ளதன் படி இப்பெண்ணுக்கு இக்குற்றத்துக்காக நியாயமான விசாரணை மேற்கொள்ளப் படவில்லை எனப்படுகின்றது. ஏற்கனவே இப்பெண்ணுக்கு செப்டம்பர் 30 ஆம் திகதி தூக்கிலிடத் திட்டமிடப் பட்டிருந்ததாகவும் ஆனால் பொது மக்களின் எதிர்ப்பு அலைகளால் இது தள்ளிப் போடப்பட்டு இன்று நிறைவேற்றப் பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

மேலும் ஜப்பாரி பக்கச் சார்பான வெளிப்படையற்ற விசாரணைக்குப் பின் மரண தண்டனை அளிக்கப் பட்டுள்ளார் என சர்வதேச மன்னிப்புச் சபையும் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் 2007 ஆம் ஆண்டு 19 வயதேயுடைய உள்துறை வடிவமைப்பாளரான ஜப்பாரியை சர்பான்டி தனது அலுவலகத்தில் வேலைக்கு அமர்த்தியிருந்ததாகவும் திடீரென ஒரு நாள் அவரைப் பாலியல் பலாத்காரம் செய்த போது தற்காப்புக்காக சர்பான்டியினை கத்தியால் குத்தி ஜப்பாரி கொலை செய்து விட்டதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.

மேலும் இச்சம்பவத்தின் பின்னர் தனது குடும்பத்தினரையோ அல்லது சட்டத்தரணியினையோ சந்திக்க அனுமதி மறுக்கப் பட்டு தனிமைச் சிறையில் இரு மாதங்கள் அடைக்கப் பட்ட ஜப்பாரி இக்காலப் பகுதியில் சித்திரவதை செய்யப் பட்டதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இவ்வருடம் ஈரான் சுமார் 170 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. கடந்த வருடம் சீனாவுக்கு அடுத்து உலகில் அதிகளவு பேருக்கு மரண தண்டனை அளித்த நாடாகவும் ஈரான் விளங்குவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to தன்னைக் கற்பழிக்க முயன்ற ஆணைக் கொலை செய்த பெண்ணுக்கு தூக்குத் தண்டனை விதித்த ஈரான்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com