எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பரிசீலித்து வருவதாக முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஆனாலும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட்டால் நான் போட்டியிட மாட்டேன். ஏனெனில், மூன்றாவது தடவையாக போட்டியிடுவதற்கு சட்டபூர்வ உரிமையோ அல்லது தார்மீக உரிமையோ அவருக்கில்லை. அது ஒரு சட்டவிரோத தேர்தலாகவே கருதப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், எதிர்காலத்தில் வரும் தேர்தல்களில், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிக்கும்படி ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்க எங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்று சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளார்.

0 Responses to ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட்டால், நான் போட்டியிட மாட்டேன்: சரத் பொன்சேகா