Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவை சிறைமாற்றம் செய்யும் அதிகாரம் கர்நாடக அரசுக்கு இல்லை என்று, கர்நாடக முதல்வர் சித்தாராமையா கூறியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனைப் பெற்று கடந்த 12 நாட்களுக்கும் மேலாக ஜெயலலிதா கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள பார்ப்பன அக்ரஹார சிறையில் இருக்கிறார். ஜெயலலிதாவை கர்நாடக சிறையில் அடைத்ததற்கே அதிமுக தொண்டர்கள் வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசி வருகின்றனர். மேலும் அம்மாவைப் பழிவாங்கும் நடவடிக்கையாக கர்நாடக அரசு ஜாமீன் பெறவும்
முட்டுக்கட்டைப் போட்டு வருகிறது என்றும் தற்போது அதிமுக தொண்டர்கள் பேசி வருகின்றனர். கர்நாடகா தமிழ்நாடு இடையே உறவு மேலும் பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்றால் ஜெயலலிதாவை பார்ப்பன அக்ரஹார சிறையில் இருந்து மாற்றம் செய்ய வேண்டும் என்றும் பல அரசியல் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கர்நாடகாவுக்கு தமிழகத்தில் இருந்து கடந்த ஒரு வாரமாகவே பேருந்துகள் எதுவும் இயங்கவில்லை. இன்று முற்றிலுமாக இயங்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்தான் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தாராமையா, கர்நாடக அரசுக்கு ஜெயலலிதாவை வேறு எந்த மாநில சிறைக்குமோ, அல்லது தமிழக சிறைக்குமோ மாற்றும் அதிகாரம் இல்லை என்று
கூறியுள்ளார்.

0 Responses to ஜெயலலிதாவை சிறை மாற்றம் செய்யும் அதிகாரம் கர்நாடக அரசுக்கு இல்லை:சித்தாராமையா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com