மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் விரைவாகவும் ஏனைய நாடுகளில் மெல்ல மெல்லவும் பரவி வரும் எபோலா ஆட்கொல்லி வைரஸினால் பலர் பலியாவது அதிகரித்து வரும் நிலையில் எபோலாவால் அதிகளவு பேர் தாக்கப் பட்ட நாடுகளில் ஒன்றான லைபீரியாவில் நாடு முழுதும் நடைபெறவிருந்த செனட் சபைக்கான தேர்தல் ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.
சமீபத்தில் அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த முதல் எபோலா நோயாளியான 42 வயதுடைய தாமஸ்துங்கன் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளார். மேலும் ஸ்பெயினில் எபோலா தாக்கியிருந்த மருத்துவ தாதியின் உதவியாளரினது உடல் நிலமையும் மிக மோசாமாகியுள்ளது என அவரைப் பரிசோதித்த மருத்துவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவங்களால் அமெரிக்க மற்றும் ஸ்பானிய விமான நிலையங்களில் பாதுகாப்புக் கெடுபிடிகள் தீவிரமடைந்துள்ளன. நிகழ்கால உலகின் மிக வலிமையான ஆட்கொல்லி நோய்த் தொற்றான எபோலா இதுவரை 3800 உயிர்களைப் பலி வாங்கியுள்ளது என உலக சுகாதார அமைப்பான WHO அறிவித்துள்ளது. தற்போது இந்த நோய் வேகமாகப் பரவி வரும் நாடுகளாக கினியா, லிபேரியா, நைஜீரியா, செனெகல், சியெர்ரா லெயோனே மற்றும் அமெரிக்கா ஆகியவை விளங்குகின்றன. இந்நாடுகளில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள் பலருக்கும் கூட எபோலா தொற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை எபோலா மிக வேகமாக இனிவரும் இரு ஆண்டுகளுக்கு ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய தேசங்களுக்கும் பரவினால் இதைக் கட்டுக்குக் கொண்டு வர $32 பில்லியன் டாலர் செலவாகும் என உலக வங்கி அறிவித்துள்ளது.

0 Responses to எபோலா அபாயத்தால் லைபீரியாவில் தேர்தல் திகதி ஒத்தி வைப்பு!