வடக்கு மாகாணத்திற்கு மஹிந்த ராஜபக்ஷ மேற்கொள்ளவுள்ள விஜயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
வரும் 12, 13ஆம் திகதிகளில் அரச நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம் செய்கின்றார். இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு மாகாண சபை முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனாலும், இந்த நிகழ்வுகளை புறக்கணிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது என்றும், இது தொடர்பில் விளக்கமளித்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதவுள்ளதாகவும் தெரிகிறது.

0 Responses to மஹிந்த ராஜபக்ஷவின் வடக்கு விஜயத்தை த.தே.கூ புறக்கணிப்பு?