Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லண்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் லைக்கா மொபைல் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் "கத்தி" படத்தின் தயாரிப்பாளருமான சுபாஷ்கரன் அல்லிராஜா மற்றும் பிரேம் கொழும்பு கட்டநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

கத்தி படம் வெற்றி பெற்றதனை அடுத்து, லைக்கா படத்தயாரிப்பு குழுவினர் இந்தியா சென்று பின்னர், அதனைக் கொண்டாட மாலைதீவுகள் சென்று தங்கியுள்ளார்கள்.

பின்னர் மாலைதீவில் இருந்து இன்று காலை லண்டன் திரும்ப இருந்துள்ளனர்.

இந்தநிலையில் அவர்களது விமானம் கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையம் சென்று அங்கிருந்து லண்டன் புறப்பட தயாராக இருந்துள்ளது.

சுபாஷ்கரன் பாஸ்போட் படத்தை, கையில் எடுத்துக்கொண்டு விமானத்தினுள் வந்த 10 பேர் அடங்கிய குழு ஒன்று, பிசினஸ் கிளாஸ் இருக்கையில் அமர்ந்திருந்த சுபாஷ்கரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகளுக்கும் சுபாஷ்கரன் குழுவினருக்கும் இடையோ தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கைதிற்கான காரணம் உறுதி செய்யப்படாத நிலையில் குறித்த குழுவினர் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டு அடுத்து லண்டன் நோக்கி புறப்பட இருக்கும் விமானத்திற்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.





0 Responses to லைகா மொபைல் உரிமையாளர் சுபாஷ்கரன் மற்றும் பிரேம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com