"ஜெயலலிதா கைதுக்காக, தெருவில் இறங்கி போராடினால், அ.தி.மு.க.,வினர் மதிப்பை இழப்பார்கள்,'' என, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபி வந்த இல.கணேசன், நிருபர்களிடம் கூறியதாவது : ஜெயலலிதாவுக்கு, நீதிமன்றம் நியாயமான தண்டனை தந்திருந்தாலும் கூட, நமக்கு தெரிந்த ஒருவர் சிறை சென்றிருக்கிறார் எனும்போது, லேசான வருத்தம் ஏற்படும். என் மனதிலும், அந்த வருந்தம் இருந்தது. ஆனால், 18 ஆண்டுகளுக்கு பின், தீர்ப்பு வழங்கியதால், எக்காரணத்துக்காக தண்டனை வழங்கப்பட்டது என்ற நிலை மாறி, யாருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என நினைவில் வருவது கூட, அனுதாபத்துக்கு காரணமாகிறது. கடந்த, 10 நாட்களாக, அ.தி.மு.க.,வினர் செய்த அனைத்து செயல்களும், அனைத்து அனுதாபங்களையும் முறித்துள்ளது. அ.தி.மு.க., மீது மக்கள் மத்தியில், வெறுப்பு உண்டாகி இருக்கிறது. அந்தளவுக்கு மக்களுக்கு தொந்தரவு செய்கின்றனர்.
தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை காக்க வேண்டிய பொறுப்பே, அ.தி.மு.க.,வுக்கு மட்டுமே இருக்கிறது. ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தாலும், அ.தி.மு.க., கையில் தான் ஆட்சி உள்ளது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைவை, அக்கட்சியினர் செய்வதை, போலீஸார் கைகட்டி, வேடிக்கை பார்ப்பது, மக்கள் மத்தியில் வெறுப்பை உருவாக்கி உள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்பதற்காக, கர்நாடகத்துக்கு மாற்றினர். கர்நாடக மாநிலம், வலியப்போய், "நாங்கள் தான் வழக்கை நடத்துவோம்' என, கேட்டுப்பெறவில்லை.
ஆனால், அ.தி.மு.க.,வினர் பலர், கர்நாடகா மக்களுக்கு எதிராக, கர்நாடகாவுக்கு எதிராக பேசுவதும், கோஷமிடுவதும், போஸ்டர் ஒட்டுவதும் கண்டிக்கத்தக்கது. அவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்.நீதிமன்றத்தின் கையில் தீர்ப்பு உள்ளது. சட்ட வல்லுனர்கள், தங்கள் வாதத்திறமையால், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் வாதாடி நிவாரணம் பெற வேண்டும். தெருவில் இறங்கினால், அ.தி.மு.க.,வினர், நிச்சயமாக மதிப்பை இழப்பர். மகாராஷ்டிரா தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும், என்றார்.

0 Responses to ஜெ. கைதுக்காக அதிமுகவினர் செய்யும் அட்டகாசம், அனுதாபத்தை இழக்கச் செய்துள்ளது: இல கணேசன்