Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்குவதற்கான சகல தகுதிகளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே இருப்பதாக பொது பல சேனா தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே பொது பல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்கு இதுவரையிலும் ஆற்றிய சேவைகளை பார்க்கும் போது பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கு அவருக்கே தகுதியிருக்கின்றது என்று கூறியுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர், தான் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கு இன்னும் காலமிருப்பதாக தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் பொது பல சேனா, யாரை ஆதரிக்கும் என்பது தொடர்பில், எதிர்க்கட்சியினால் ஜனாதிபதி வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடத்தில் அறிவிக்கப்படும் வெளிப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கே தகுதியுண்டு: பொது பல சேனா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com