Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கனிமவள முறைகேட்டைத் தடுக்க அமைக்கப்பட்டுள்ள சகாயம் ஐஏஎஸ் தலைமையிலான குழுவுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போட வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

கனிமவள முறைகேடுகளைக் கண்டுபிடிக்க உயர் நீதிமன்றம் அமைத்த சகாயம் தலைமையிலான குழு குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்திருந்தது. அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் சகாயம் தலைமையிலான குழுவுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி
ஏந்திய போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.

மேலும், சகாயம் தலைமையிலான குழு இன்னும் 7 நாட்களுக்குள் தங்களது விசாரணையைத் துவக்க, தமிழக அரசு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்றும், நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர் என்பதுக் குறிப்பிடத் தக்கது. சகாயம் தலைமையிலான குழுவுக்கு நியாயமானத் தீர்ப்பு வழங்கியுள்ளதுக் குறித்து தமிழக மக்கள் தங்களது வரவேற்பைத் தெரிவித்துள்ளனர்.

0 Responses to சகாயம் ஐ ஏ எஸ் தலைமையிலான குழுவுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு: சென்னை உயர் நீதிமன்றம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com