ஜெயலலிதாவின் ஜாமின் வழக்கு விசாரணையில் ஜெயலலிதா தரப்பில் இதுவரை ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி திடீரென விலக்கப்பட்டு, பாலி எஸ்.நாரிமன் தற்போது நியமிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த செப்.24ம் திகதி 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்தும் ஜாமின் கோரியும், அவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதில் ஜெயலலிதா சார்பில் ஜெத்மலானி ஆஜராவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், உச்சநீதிமன்ற வட்டாரத்தில் அவருக்கு நல்ல பெயர் இல்லை எனவும் அவர் ராசியில்லாதவர் எனவும் கூறப்படுகிறது. அதோடு இறுதியாக ஒரு மணிநேரத்திற்கு மேலாக ராம் ஜெத்மலானி வாதிட்ட போதும் ஜெயலலிதாவுக்கு ஜாமின் கிடைக்கவில்லை. இதனால் கடந்த 7ம் திகதி ஜெயலலிதாவின் ஜாமின் மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பாலி எஸ்.நாரிமன் ஆஜராகியுள்ளார். இவர் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த போது உச்சநீதிமன்றத்தில் தொடுத்த காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்குகளில் கர்நாடக அரசு சார்பில் ஆஜரானவர். அப்போது ஜெயலலிதாவுக்கும், தமிழக அரசுக்கும் எதிராக பல்வேறு கருத்துக்களை முன்வைத்தவர். அதோடு ஜெயலலிதாவின் ஜாமின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்துவும் இவரும் நெருங்கிய நண்பர்கள். இதைக் கருத்தில் கொண்டே தற்போது ஜெயலலிதா சார்பில் பாலி எஸ்.நாரிமன் நியமிக்கப்பட்டிருக்கலாம் எனும் கருத்து நிலவுகிறது.
இதேவேளை பாலி நாரிமன் மகன் ரொகிண்டன் பாலி நாரிமன் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருப்பதால் பாலி நாரிமன் இவ்வழக்கில் ஆஜராவதை தடுக்கவேண்டும் என டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

0 Responses to ராம் ஜெத்லமானி திடீர் நீக்கம்: ஜெ.சார்பில் ஆஜராகிறார் பாலி எஸ்.நாரிமன்