வெளிநாட்டவர்கள் வடக்கு மாகாணத்திற்கு செல்ல வேண்டுமாயின் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டியது அவசியம் என்று இராணுவப் பேச்சாளரும், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையப் பணிப்பாளருமான ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தையொட்டி வெளிநாட்டவர்கள், வெளிநாட்டு கடவுச்சீட்டை கொண்டிருப்பவர்கள் இலங்கையின் வடபகுதிக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதில் எந்தவித உண்மைகளும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இராணுவப் பேச்சாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடபகுதிக்கு வெளிநாட்டவர்கள் செல்லும் போது அது தொடர்பில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சிடம் அறிவித்து விட்டு செல்லும் நடைமுறை காணப்படுகின்றது. இது சாதாரண நடைமுறையாகும். சகல நாடுகளிலும் இது காணப்படுகின்றது.
இலங்கையில் இது நடைமுறையில் இருந்தது. தற்போது இருக்கின்றது. தொடர்ந்து இருக்கும். வெளிநாட்டு பிரஜையொருவர் வடபகுதியில் தான் செல்லும் இடம், என்ன காரணங்களுக்காக செல்கின்றார்? எங்கு தங்க போகிறார்? என்ற விடயங்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் அறிவித்து, அனுமதி பெற்று செல்ல வேண்டும்.
100ற்கு 99 வீதமானவர்கள் வடபகுதிக்கு நல்ல நோக்கங்களுக்காக அல்லது மக்களுக்கு உதவும் செயற்பாடுகளுக்காக சென்றாலும் அதில் ஒரு சிலர், நாட்டில் மீண்டும் பிரச்சினையை ஏற்படுத்தவும் இலங்கை தொடர்பில் அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். அதற்கு நாம் இடம் தரபோவதில்லை.
அது மாத்திரமன்றி வடபகுதிக்கு செல்லும் வெளிநாட்டு பிரஜைகளின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அவர்கள் செல்லும் இடம், நோக்கம் என்பவை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுக்கு அறியதருமாறு கோரப்பட்டுள்ளது.
வடபகுதிக்கு செல்லும் வெளிநாட்டு பிரஜைகள் தமது விபரங்கள் அடங்கிய கடிதத்தை நகர அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு அமைச்சு, இல. 15/5, பாலதக்ஷ மாவத்தை, கொழும்பு-03 எனும் முகவரிக்கு அல்லது 011-2328109 எனும் பக்ஸ் இலக்கத்திற்கு அறியதந்து அனுமதியை பெற்று செல்ல முடியும்” என்றுள்ளார்.

0 Responses to வெளிநாட்டவர்கள் வடக்கு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவை: ருவான் வணிகசூரிய