Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேசியக்கூட்டமைப்பில் தான் எந்தகட்சியென்பது தெரியவில்லையென கூறியிருக்கிறார் வடமாகாண முதலமைச்சர் கணபதிப்பிள்ளை விக்கினேஸ்வரன். எனினும் பங்காளிக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ போன்ற ஆயுதமேந்திய வன்முறைக் கட்சிகளுடன் என்னால் சேர்ந்திருக்கமுடியாது. ஆகவேதான் நான் கொள்கை ரீதியில் தமிழரசுக் கட்சியைச் சார்ந்திருக்கின்றேன் எனவும் அவர் திருவாய் மலர்ந்துள்ளார்.

அவ்வாறானால் வடமாகாணசபை தேர்தலின் போது அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டு சேர்ந்து வந்தால் போட்டியிடுவதாக கூறி போட்டியிட்டிருந்தீர்களேயென எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் கணபதிப்பிள்ளை விக்கினேஸ்வரன் நீங்கள் ஆட்களைக் கொலைகள் செய்தவர்கள். உங்களுடன் கூட்டு சேரமுடியாதெனவும் தெரிவித்தார்.

யாழில் நேற்றைய தினம் இடம்பெற்ற கூட்டமைப்பின் உயர்மட்ட சந்திப்பிலேயே இவ்விவகாரம் சூடுபிடித்திருந்தது. இதனால் பங்காளிக்கட்சிகள் பலவும் கடும் சீற்றமடைந்ததாக தெரியவருகின்றது.

இக்கூட்டத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், தமிழரசுக் கட்சி சார்பில் நடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம் புளொட் சார்பில் கந்தையா சிவநேசன் (பவன்), வட மாகாண அமைச்சர்கள் பொ.ஐங்கரநேசன், டெனீஸ்வரன், ப.சத்தியலிங்கம், த.குருகுலராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

0 Responses to கூட்டமைப்பு பங்காளி கட்சிகள் கொலைகாரக் கட்சிகள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com