Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வவுனியா, பழைய கற்பகபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை அச்சுறுத்தும் வகையில் சுதந்திரக்கட்சி சார்பு கிராம அலுவலர் இராணுவத்தை அனுப்பினார் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அச்சத்துடனேயே தாம் வாழ்கின்றனர் எனத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

கடந்த செவ்வாய்கிழமை கற்பகபுரம் கிராம அலுவலரைத் தாக்கினர் என கிராம அலுவலர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பழைய கற்பகபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை செவ்வாய் இரவு 9 மணியளவில் வவுனியா பொலிஸார் கைது செய்தனர்.

இதனையடுத்து கிராம அலுவலரை குறித்த இருவரும் தாக்கவில்லை எனவும் கிராம அலுவலர் பொய்முறைப்பாட்டைப் பொலிஸில் செய்துள்ளார். எனவே அவரை இடம்மாற்றுமாறும் கோரி அப்பகுதி மக்கள் நேற்று புதன்கிழமை வவுனியா மாவட்ட செயலகம் முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது இப்பிரச்சனை தொடர்பில் தான் கவனம் செலுத்துகிறார் என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதேவேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இருவரும் புதன்கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை குறித்த இரு நபர்களின் வீட்டுக்கும் சீருடை தரித்த இராணுவத்தை அழைத்துச் சென்ற கிராம அலுவலர் அவர்கள் மூலம் தமக்கு அச்சுறுத்தல் விடுத்துதுள்ளார் என அவர்கள் தெரிவிக்கின்றனர். நீதிமன்ற விசாரணையில் குறித்த சம்பவம் இருக்கும் போது இப்பிரச்சினை தொடர்பில் எவ்வாறு இராணுவத்தை தமது வீட்டுக்கு அழைத்து வரமுடியும் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

0 Responses to இராணுவத்தை வைத்து மிரட்டும் விதானைமார்! மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com