சுப்ரமணிய சுவாமி மீது தமிழக அரசு தொடர்ந்த 5 அவதூறு வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழக மீனவர்களுக்கு எதிராக சுப்ரமணிய சுவாமி பேசினார் என்பது உள்ளிட்ட 5 அவதூறு வழக்குகளை சுப்ரமணிய சுவாமி மீது, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. அந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சுப்ரமணிய சுவாமி இன்று ஆஜராக வேண்டும்,. ஆனால் நேற்று சுப்ரமணிய சுவாமி உச்சா நீதிமன்றத்தில் தம்மீதான அவதூறு வழக்கில் முகாந்திரம் இல்லை என்றும், இதை விசாரிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை சிறப்பு அமர்வு நாளை விசாரிக்கும் என்று நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியிருந்த நிலையில், இன்று அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணிய சுவாமியை அவதூறு வழக்கில் விசாரிக்கத் தடை விதித்து உள்ளனர். அதோடு 6 வார காலத்துக்குள் இதுக்குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளனர்.

0 Responses to சுப்ரமணிய சுவாமி மீதான அவதூறு வழக்குகளை விசாரிக்கத் தடை: உச்ச நீதிமன்றம்