Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆப்பிரிக்க நாடான ஷாம்பியாவின் அதிபராகப் பதவி வகித்த மைக்கேல் சட்டா தனது 77 வயதில் இலண்டனில் காலமாகி உள்ளார்.

கடந்த சில மாதங்களாக சுகயீனமுற்றிருந்த இவர் கடந்த 19 ஆம் திகதி முதல் இலண்டனின் கிங் எட்வர்ட் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அது பலன் தராது செவ்வாய்க்கிழமை மரணித்திருந்தார். இச்செய்தியை ஷாம்பிய ஊடகங்கள் வெளியிட்டதுடன் மந்திரிசபை செயலாளர் ரோலன்ட் சிஸ்காவும் உறுதிப் படுத்தியுள்ளார்.

மைக்கேல் சட்டா கடந்த மாதம் நியூயோர்க்கில் ஐ.நா சபையில் உரையாற்றத் திட்டமிட்டிருந்த போதும் உடல் நலக்குறைவினால் அவரால் பங்கேற்க முடியவில்லை. எந்த நோயினால் மைக்கேல் சட்டா மரணித்தார் என்ற தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் ஸ்காட்லாந்து வம்சாவளியில் வந்த குய் ஸ்காட் (Guy Scott)ட் என்பவர் ஷாம்பியாவின் இடைக்கால அதிபராகப் பதவியேற்றுள்ளார். இதன் மூலம் இனவெறிக்கு மத்தியிலும் துணை சஹாரா ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் ஓர் நாட்டின் அதிபராகப் பதவியேற்ற முதல் வெளிநாட்டவராக இவர் மாறியுள்ளார். 3 வருடங்களுக்கு முன் ஸ்காட் ஷாம்பியாவின் பிரதி அதிபராகவும் திகழ்ந்தார். தற்போது ஷாம்பிய அரசியலமைப்புச் சட்டப் படி இன்னும் 90 நாட்களுக்குள் அங்கு தேர்தல் நடத்தப் பட வேண்டும் என்பதுடன் அதுவரை ஸ்காட் அதிபராக செயற்படுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை ஸ்காட் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் பிரதான வேட்பாளராகப் போட்டியிடுவாரா என்பது இன்னமும் தெளிவாகவில்லை. மேலும் ஷாம்பிய நாட்டு சட்டப்படி அதிபர் வேட்பாளராகப் போட்டியிடும் ஒருவரது பெற்றோர் அந்நாட்டில் பிறந்திருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். ஆனால் ஸ்காட் இனது பெற்றோர் வெளிநாட்டில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஷாம்பியா நாட்டு அதிபர் மைக்கேல் சட்டா இலண்டனில் மரணம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com