Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதன் ஊடாக வெற்றி கொண்ட சமாதானத்தை பாதுகாக்க முடியும் என்று பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

காணாமற்போனோர் தொடர்பிலான தகவல்களை வெளியிடுவது இலங்கையின் நீண்டகால நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக நேற்று புதன்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். அங்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நிரந்தர நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை ஏற்படுவதற்கான பிரயத்தனங்களை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கத்திற்கு தாம் எடுத்துக் கூறியுள்ளதாகவும், காணாமற்போயுள்ளவர்கள் தொடர்பிலான தகவல்களை உரிய முறையில் அறிந்து கொள்ளாமல் நீண்டகால நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது எனவும், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதனை அறிந்து கொள்ளும் வரை அந்த வடுக்களை அழிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதன் மூலம் சமாதானத்தை பாதுகாக்க முடியும்: கமலேஷ் சர்மா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com