Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பதுளை ஹல்துமுல்ல மீரியபெத்த பகுதியில் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்ற மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை உதவிகளை வழங்கத் தயாராகவுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒத்துழைப்பு அலுவலகம் அறிவித்துள்ளது.

இதனை, ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் ஸ்டீபன் துஜாரிக் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மீரியபெத்த மணிசரிவு காரணமாக 10 பேர் உயிரிழந்தாகவும், 300க்கும் மேற்பட்டவர்கள் காணமற்போயுள்ளதாகவும், அத்துடன் 150 வீடுகள் தரைமட்டமாகியுள்ளதாகவும் தேசிய இடர் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த பாதிப்புக்களில் இருந்து இலங்கை மீள்வதற்கு ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான அலுவலகம் இலங்கைக்கு உதவ தயாராகவுள்ளது.

இதற்காக இலங்கை அரசாங்கத்தை ஐக்கிய நாடுகள் தொடர்பு கொண்டுள்ளது. இதேசமயம் இலங்கை செஞ்சிலுவை சங்கம் தனது முதலுதவி குழுக்களை தயார்படுத்தியுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனமும் தயார் நிலையிலுள்ளது” என்றுள்ளார்.

0 Responses to மீரியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கத் தயார்: ஐ.நா. அறிவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com