Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மூன்று நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்புக் குழு இன்று செவ்வாய்க்கிழமை இலங்கை வருகின்றது.

இலங்கைவரும் இந்தக் குழு யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ஐக்கிய நாடுகளின் கொழும்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவமளிக்கப்படவேண்டும். இவற்றுக்கான முழுமையான அணுகுமுறையை கடைப்பிடிக்கவேண்டியதன் அவசியத்தை இலங்கைக்கு வலியுறுத்துவதற்காக பாதுகாப்புச்சபையின் வேண்டுகோளின் பேரில் குறிப்பிட்ட குழுவினர் இலங்கை வருகின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்துடனான சந்திப்பின்போதும், யாழ்ப்பாண விஜயத்தின் போதும் இக்குழுவினர் இதனை வலியுறுத்தவுள்ளனர். பயங்கரவாதத்தை இராணுவ நடவடிக்கைகள், நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சட்ட அமுலாக்கல் என்பவற்றால் மாத்திரம் வென்றுவிடமுடியாது. சமூகங்களுடன் ஆக்கபூர்வமான பேச்சுக்களும் அவசியம் என இக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

0 Responses to ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்புக் குழு இலங்கை விஜயம்; யாழுக்கும் செல்கிறது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com