Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் எனும் குற்றச்சாட்டில் இந்திய தொழில் அதிபர்கள் மூன்று பேரின் பெயர்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

 தாபர் இந்தியா குழுமத்தின் முன்னாள் இயக்குனரான பிரதீப் பர்மன், கோவாவைச் சேர்ந்த சுரங்க நிறுவன அதிபரான ராதா சதீஷ் டிம்லோ, குஜராத்தைச் சேர்ந்த பிரபல தங்க வியாபாரி சிமன்லால் லோதியா ஆகியோருடைய பெயர்கள் அதில் இடம்பெற்று இருந்தன. மேலும் டிம்லோ சுரங்க நிறுவன இயக்குனர்கள் 4 பேர் பெயர்களும் இந்த பட்டியலில் இடம் பெற்று உள்ளன. இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். எனினும் தம் மீதான குற்றச்சாட்டுக்களை இவர்கள் மறுத்துள்ளனர்.

சுவிற்சர்லாந்து, லிச்டென்ஸ்டெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இந்தியாவைச் சேர்ந்த தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் பலர் கறுப்பு பணம் பதுக்கிவைத்திருப்பதாகவும், இதை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மூத்த வழக்கறிஞரான ராம்ஜெத் மலானி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் அடிப்படையில் கறுப்பு பணத்தை மீட்பது தொடர்பில் மத்திய அரசு உயர்மட்ட குழு ஒன்றை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையிலே வெளிநாட்டில் கறுப்பு பணம் பதுக்கிவைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிடப்போவதாகவும் இவர்கள் அனைவரும் வரி ஏய்ப்பின் மூலமகா சட்டவிரோதமாக பணம் வைத்திருப்பவர்கள் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

உச்சநீதிமன்றத்தில் இப்பட்டியல் வெளியான நேரத்தில் மேலும் ஐந்து பேர் பெயர் பட்டியலை மத்திய அரசு தாக்கல் செய்திருப்பதாகவும் அதில் காங்கிரஸ் ஆட்சியின் போது மன்மோகன் சிங்கின் அரச சபையில் இடம்பெற்றிருந்த பிரனீத் கவுர் என்பவரும் அடங்குவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

0 Responses to வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் வைத்திருந்தவர்கள் - பெயர்ப் பட்டியலை வெளியிட்டது மத்திய அரசு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com