தமிழகத்தில் அரசு நிர்வாகம் செயலிழந்துள்ளதா என்கிற சந்தேகம் உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் பாஜக அலுவலகத்தில் 2016 ம் ஆண்டு நடக்கவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வியூகம் குறித்து கட்சியினருடன் ஆலோசித்த தமிழிசை சவுந்திரராஜன், தீபாவளி நெருங்கிவிட்ட சமயத்திலும் இன்னும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப் படவில்லை. போனஸ் தொகை எப்போதுமே தீபாவளிக்கு ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்கு முன்னதாகவே எந்த அரசு துறைக்கும் அறிவிக்கப்படுவது வழக்கம். ஆனால் தீபாவளிக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் இன்னமும் போக்குவரத்துத்
தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்படவில்லை. எனவே தமிழகத்தில் அரசு நிர்வாகம் ஒழுங்காக செயல்படுகிறதா என்கிற சந்தேகம் எனக்கு எழுந்துள்ளது. இனியாவது தமிழக முதல்வர் அரசு போக்குவரத்து ஊழியர்கள் போனஸ் குறித்து உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்திரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

0 Responses to தமிழகத்தில் அரசு நிர்வாகம் செயலிழந்துள்ளதா என்கிற சந்தேகம் உள்ளது: தமிழிசை சவுந்திரராஜன்