Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும், ஜனநாயகக் கட்சித் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவுக்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலுள்ள ஜனநாயகக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்திச் சந்திப்பில் எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் போட்டியிடுவதையும், அதேவேளை இந்த பொது எதிர்க்கட்சி கூட்டணி ஒரு பொது சின்னத்தில் களமிறங்க வேண்டும் என்பதையும் தான் வலியுறுத்தி வருவதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த காலங்களை போல், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் மீதும், பொது எதிர்கட்சி கூட்டணியின் மீதும், புலி முத்திரை குத்தி இனவாத பிரசாரத்தை முன்னெடுக்க இந்த அரசுக்கு தான் இடமளிக்க போவதில்லை என்றும், இது தொடர்பான இறுதி நிலைபாட்டை உரிய வேளையில் அறிவிப்பதாகவும் சரத் பொன்சேகா கூறியுள்ளதாகவும், ஜனநாயக கட்சியும், ஜனநாயக மக்கள் முன்னணியும், பொது எதிரணியில் காத்திரமான பங்கை கூட்டாக வகிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாகவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to மனோ கணேசன்- சரத் பொன்சேகா சந்திப்பு; ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆராய்வு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com