நேற்று வெள்ளிக்கிழமை ஈராக்கின் செய்தி கமெரா மேன் உட்பட வடக்கு பக்தாத்தின் பல நகரங்களையும் கிராமங்களையும் சேர்ந்த 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது IS ஜிஹாதிஸ்ட் அமைப்பு.
இத்தகவலை அதிகாரிகள், உறவினர்கள் மற்றும் நேரில் பார்த்தவர்கள் உறுதி செய்துள்ளனர். கொல்லப் பட்ட கமெரா மேன் உள்ளூர் சேனலான சமா சலஹெட்டின் இல் பணியாற்றிய 37 வயதுடைய ராட் அல் அஷ்ஷாவி என அடையாளப் படுத்தப் பட்டுள்ளார்.
இவருடன் சேர்த்து டிக்ரிட்டுக்கு கிழக்கே சம்ரா கிராமத்தைச் சேர்ந்த இவரது சகோதரரும் மேலும் இரு குடிமக்களும் கூட பொது மக்கள் மத்தியில் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். சமீப காலமாக ஷைட்டி முஸ்லிம்களால் நிர்வகிக்கப் பட்டு வரும் அரசுடன் தொடர்புடையவர்கள் எனத் தான் சந்தேகிக்கும் பல பொது மக்களை IS அமைப்பு கொலை செய்து வருகின்றது. இதே போன்றே மேலும் 9 பேர் வட டிக்ரிட்டில் வெள்ளிக்கிழமை IS இனால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர்.
தற்போது ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள இரு முக்கிய நகர்களில் அமைந்துள்ள 7 டிவி சேனல்களை ISIS அமைப்பு தன் வசம் வைத்துள்ளது எனவும் ஏற்கனவே சமூக வலைத் தளங்களான டுவிட்டர் மற்றும் யூ டியூப் இல் ISIS ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. ஈராக்கின் மோசுல் நகரில் 5 டிவி சேனல்களையும் ரக்காஹ் நகரில் இரு டிவி சேனல்களையும் கைப்பற்றியுள்ள ISIS பல ஊடகவியலாளர்களை சிரச்சேதம் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் யூடியூப்பில் உலகளாவிய ரீதியில் 800 000 தடவைகள் இவ்வமைப்பின் வீடியோக்கள் பார்வையிடப் பட்டுள்ளது.
இதேவேளை IS அமைப்பு தமது டுவிட்டர் கணக்குகளை முடக்கினால் தம்மைக் கொலை செய்வோம் என டுவிட்டர் ஊழியர்களைத் தொலைபேசி அழைப்பினூடாக அச்சுறுத்தியுள்ளதாக டுவிட்டரின் தலைமைச் செயல் அதிகாரியான (CEO) டிக் கொஸ்டொலோ அறிவித்துள்ளார். இத்தகவலை இவ்வாரம் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற Vanity Fair New Establishment மாநாட்டில் இவர் அறிவித்திருந்தார். இதேவேளை தகவல் பரிமாற்றத்துக்கும் தமது செய்தியை உலகம் முழுதும் பரப்புவதற்கும் டுவிட்டர் தளத்தை மிக உபயோகம் மிக்கதாக ISIS பயன் படுத்தி வருவதாகவும் ஆனால் டுவிட்டரின் விதிமுறைகளை மீறி செயற்பட்டதால் இவரது கணக்குகள் முடக்கப் பட நேர்ந்ததாகவும் டிக் கொஸ்டொலோ விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஈராக்கின் ஊடகவியலாளர் உட்பட 12 பேரைக் கொலை செய்தது IS ஜிஹாதிஸ்ட்