Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கு ஐந்து நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் இன்று திங்கட்கிழமை சந்தித்துப் பேசியுள்ளார்.

இதன்போது, நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கமலேஷ் சர்மா தலைமையிலான பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனிடையே, நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இலங்கை வந்த கமலேஷ் சர்மா, நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டு அங்கு வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியையும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசியிருந்தார்.

0 Responses to மஹிந்த ராஜபக்ஷ- கமலேஷ் சர்மா சந்திப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com