Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை மக்களின் நல மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படுவதே சிறந்த அரசியல் சாணக்கியம் ஆகும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் இன்று சனிக்கிழமை வடக்கு மாகாணத்திற்கு வெளியே பட்டதாரி ஆசிரிய நியமனங்களைக் கோரும் தமிழ்மொழி மூல பட்டதாரிகளுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தேர்தல் காலங்களில் மக்களை உசுப்பேற்றி தேர்தலில் வெற்றிபெறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது சுயலாபத்தைக் கருத்தில் கொண்டே செயற்பட்டு வருகின்றனர் என்பதுடன், மக்களுக்காக எவ்விதமான செயற்திட்டங்களை முன்னெடுக்க கூட்டமைப்பினர் தயாராகவில்லை.

அந்தவகையில், கிடைக்கப் பெறுகின்ற சந்தர்ப்பங்களை மக்களின் நலன்சார்ந்த அபிவிருத்தி மற்றும் முன்னேற்பாட்டு செயற்திட்டங்களை முன்னெடுக்கும் பொருட்டு அவற்றை சரியான முறையிலும் உரிய நேரத்திலும் பயன்படுத்துவதே சிறந்த அரசியல் சாணக்கியம் என்பதுடன் அதையே நாம் இற்றைவரை முன்னெடுத்து வருகின்றோம்” என்றுள்ளார்.

0 Responses to சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்துவதே அரசியல் சாணக்கியமாகும்: டக்ளஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com