இலங்கையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் திட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்காக பொறிமுறையொன்றை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நல்லிணக்கம் தொடர்பான அமைச்சரவை உபகுழுவொன்றை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் நல்லிணக்கம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பல்வேறு நிறுவனங்கள் இது தொடர்பில் பல்வேறு செயற் திட்டங்களை முன்னெடுக்கிறது. இவை தேசிய மற்றும் பிரதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை எற்படுத்தும் நோக்குடன் செயற்படுத்தப்படும் சகல திட்டங்களையும் ஒழுங்குபடுத்துவதற்கு ஜனாதிபதியின் தலைமையில் அமைச்சர்களடங்கிய அமைச்சரவை உப குழு அமைக்கும் ஜனாதிபதியின் பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.
இது தவிர நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் செயற்படுத்தப்படுவதை கண்காணிக்கும் ஜனாதிபதியின் செயலாளர் தலைமையிலான குழுவின் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக அமைச்சின் செயலாளர்கள் உள்ளடக்கிய குழுவொன்றை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

0 Responses to இன நல்லிணக்கத்தை கட்டியெழும்பும் நோக்கில் ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை உபகுழு!