ஜனாதிபதித் தேர்தலுக்கான இறுதித் திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என்று அறிவித்துள்ள அரசாங்கம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வத்திக்கானுக்கான பயணத்தை மேற்கொண்டுவிட்டு திரும்பி வந்ததுமே முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அதில், கலந்து கொண்டு பேசும் போதே அரசாங்கத்தின் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல மேற்கண்ட விடயத்தினைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தலோ அல்லது பொதுத் தேர்தலோ நடைபெறலாம். ஆனால், இதனை இப்போதே ஊர்ஜிதப்படுத்த முடியாது. சிறீலங்கா சுதந்திரக் கட்சிக் குழுக் கூட்டத்திலும் இது தொடர்பில் எந்தவிதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் மூன்றாம் திகதி புனித பாப்பரசருக்கு இலங்கைகக்கு வருமாறு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்க வத்திக்கானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனதிபதி நாடு திரும்பிய பின்னரே தேர்தல் குறித்து முடிவு செய்யப்படும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா, முடியாதா என உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும்” என்றுள்ளார்.

0 Responses to ஜனாதிபதித் தேர்தலுக்கான இறுதித் திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை: கெஹலிய ரம்புக்வெல