பொது வேட்பாளரை நிறுத்தி தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை வீழ்த்துவதே எதிர்க்கட்சிகளின் முக்கிய யுக்தியாக இருக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடத்தப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளும் அந்தத் தேர்தலுக்கான தமது ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருகின்றன.
அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், அசாத் சாலி போன்ற பலர் கலந்துகொண்ட சந்திப்பு ஒன்று மாதுளுவாவே சோபித தேரர் அவர்களின் நீதிக்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது.
அங்கு எதிர்க்கட்சிகளின் சார்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து ஆராயப்பட்டுள்ளது. அதில் முதலில் தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்துவதையும், நிறைவேற்று அதிகார ஆட்சி முறைமையை நீக்குவதையும் மையமான நோக்கமாகக் கொண்டு ஒரு வேட்பாளரை நிறுத்துவது பற்றி ஆராயப்பட்டதாக மனோ கணேசன் பி.பி.சி.யிடம் தெரிவித்துள்ளார்.

0 Responses to பொது வேட்பாளரை முன்னிறுத்தி அரசாங்கத்தை தோற்கடிப்பதே இலக்கு: மனோ கணேசன்