மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தான் வெற்றிபெறுவது உறுதி என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
28 தேர்தல்களில் நின்று எதிர்க்கட்சித் தலைவரால் தோல்வியுற முடியுமானால், மூன்றாவது தடவையும் தேர்தலில் நின்று தன்னால் வெற்றிபெற முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இங்கு யார் பொது வேட்பாளர்? 13 கட்சிகளைக் கொண்டுள்ள நானே பொது வேட்பாளர். ஏனைய எவர் வந்தாலும் அவர் தனி வேட்பாளரே என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
பொல்கஹவெலயில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் பேரணிக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “2005ஆம் ஆண்டில் நான் ஜனாதிபதியாகப் பதவியேற்ற போது மக்கள் என்னிடம் நாட்டை மீட்டுத் தருமாறு கோரினர். நாம் நாட்டை மீட்டு நாட்டின் அனைத்து மக்களும் அச்சம் சந்தேகமின்றி சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலையையும் ஏற்படுத்தியுள்ளோம்.
அதனையடுத்து, மக்கள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழக்கூடிய வகையில் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
கொழும்பிலுள்ளவர்கள் அனுபவித்துவரும் அத்தனை வசதிகளையும் கிராமப்புற மக்களுக்கும் பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கம். அதற்கான செயற்திட்டங்களையே நடைமுறைப்படுத்தி வருகின்றோம். எதிர்வரும் டிசம்பருக்குள் நாட்டில் நூறு வீதம் மின்சாரம் வழங்கும் திட்டம் நிறைவுபெறும்.
நாம் தற்போது உலகத்துடன் வெகு வேகமாக தொடர்பு கொள்ள முடிகின்றது. நவீன உலகத்துடன் தொடர்பு கொள்வதற்கு எமது எதிர்கால பரம்பரைக்கும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். அவர்களை நவீன தொழில்நுட்பத்துறையில் முன்னேற்றும் வகையிலேயே நாம் நாடெங்கிலும் மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடங்களை ஏற்படுத்தி வருகின்றோம்.
இத்தகைய செயற்பாடுகளை நாம் நாட்டில் முன்னெடுத்துச் செல்லும் போது எதிர்க்கட்சியினர் தவறான விமர்சனங்களை மேற்கொள்கின்றனர். நாம் இத்தகைய திட்டங்கள் மூலம் ‘கொமிஸ்’ பெறுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். சொல்வதற்கு ஏதும் இல்லாத அவர்கள் இதனைத் தொழிலாகச் செய்கின்றனர்.
நாம் எதனையும் செய்யாவிட்டால் அதற்கும் குறைகூறுவர். நாட்டுக்காக பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொள்கின்ற போதும் எரிச்சலுடனும் குரோதத்துடனும் அதனைப் பார்க்கின்றனர். நாட்டுக்குச் சுதந்திரம் பெற்றுக் கொடுத்த பெரும்பாலான தலைவர்கள் எமது கிராமத்திலிருந்துதான் உருவாகியுள்ளார்கள். அங்கிருந்து வந்து மக்களுக்கு இந்தளவு சேவை செய்ய முடிவதையிட்டு நான் பெருமைப்படுகின்றேன்.
நாம் எதைச் செய்தாலும் அதனைக் குறை கூறுபவர்கள் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. நாம் அவர்களைக் குறைகூறப் போவதுமில்லை. வரலாற்றில் ஏகாதிபத்தியவாதிகள் காலத்தில் நாட்டைக் காட்டிக்கொடுத்துச் செயற்பட்டது போன்று இப்போதும் செயற்பட அவர்கள் முயற்சிக் கின்றனர். அத்தகைய யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன்” என்றுள்ளார்.

0 Responses to மூன்றாவது தடவையாகவும் நானே வெற்றி பெறுவேன்: மஹிந்த