Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மன்னாரில் குடும்பஸ்தர் கடத்தல்!

பதிந்தவர்: தம்பியன் 30 June 2016

மன்னார் பள்ளிமுனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், உயிலங்குளம் சென் பீற்றர் ஆலய பங்குப் பணிமனையில் வைத்து நேற்று புதன்கிழமை அதிகாலை கடத்தப்பட்டுள்ளதாக, கடத்தப்பட்டவரின் மனைவி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மன்னார் பள்ளிமுனை தெற்கைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான எஸ்.அன்ரன் டெனி (வயது 38) என்பவரே கடத்தப்பட்டவராவார்.

குறித்த குடும்பஸ்தர், உயிலங்குளம் சென் பீற்றர் ஆலய பங்குப் பணிமனையில் கடமையாற்றி வந்த நிலையில் நேற்று அதிகாலை 2.30க்கு ஆலய பங்குப் பணிமனையில் வைத்து கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

குறித்த குடும்பஸ்தரை புலனாய்வுத்துறையினர் என தங்களை அறிமுகப்படுத்திய சிலர் அண்மைக்காலமாக மன்னார் பள்ளிமுனையிலுள்ள அவரது வீட்டிற்குச் சென்று அச்சுறுத்தல்களை விடுத்து வந்த நிலையில், கடந்த 01ஆம் திகதி மீண்டும் புலனாய்வுத்துறையினர் என தம்மை அறிமுகப்படுத்திய சிலர் காணாமற்போன குடும்பஸ்தரின் வீட்டிற்குச் சென்று அவர் தொடர்பில் விசாரித்துள்ளனர்.

குறித்த நபர், வீட்டில் இல்லாத நிலையில் 19ஆம் திகதி மீண்டும் வருவோம் என கூறிச் சென்றுள்ளர். இது தொடர்பில் கடத்தப்பட்ட குடும்பஸ்தரின் மனைவி அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.

இந்நிலையிலே, குறித்த குடும்பஸ்தர் நேற்று புதன்கிழமை அதிகாலை ஆலய பங்குப் பணிமனையில் வைத்து கடத்தப்பட்டுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

0 Responses to மன்னாரில் குடும்பஸ்தர் கடத்தல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com