Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரதமர் பதவி தனக்கு வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொண்டு சேவையாற்றுவதற்கு தயாராக இருப்பதாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட கிளைக் கூட்டங்கள் அண்மையில் இடம்பெற்றன. குறிப்பாக பொலநறுவையில் இடம்பெற்ற கூட்டத்தில் சிறு குழுவினர் எனக்கு பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்கள். அது தொடர்பாக உத்தியோகபூர்வமாக எந்த முடிவுகளும் இல்லை. அதேபோன்று தனிப்பட்ட முறையில் என்னிடம் எந்தவிமான தீர்மானமும் இல்லை. இருப்பினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை தந்தால் அதனை ஏற்றுக்கொள்வேன் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to பிரதமர் பதவி வழங்கப்பட்டால் ஏற்றுக் கொள்வேன்: மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com