ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஆளும் ஐக்கிய சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தோடு இணைந்து கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசாங்கத்தில் இணைந்து கொண்டால் அவருக்கு, வெளிவிவகார அமைச்சர் அல்லது துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கபூருக்கு விஜயம் செய்துள்ள மங்கள சமரவீர இன்று ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்புவார் என்று கூறப்படுகின்றது. அவர், நாடு திரும்பியதும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார் என்றும், அதனால் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் அரச முக்கியஸ்தர்களை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகும் எண்ணத்தோடு மங்கள சமரவீர அண்மைய நாட்களில் இருந்ததாகவும், அதற்கிடையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், நாமல் ராஜபக்ஷவும் அவரை நேரில் சந்தித்து பலமுறை பேசியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் ஊழல்கள் நிறைந்தது என்று கூறிக் கொண்டு 2007ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கத்திலிருந்து பிரிந்து வந்து தனிக்கட்சி ஆரம்பித்த மங்கள சமரவீர, அதன் பின்னர் அந்தக் கட்சியைக் கைவிட்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to மங்கள சமரவீரவுக்கு வெளிவிவகார அமைச்சர் பதவி?