Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் தலிபான்களாகவும், அல்-கைதாக்களாகவும் பார்க்கும் போக்கு பெரும்பான்மைக் கட்சிகளின் மத்தியில் வலுத்துள்ளதாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பள்ளிவாசல்களை பயங்கரவாதிகளை உருவாக்கும் நிலையங்களாக சித்தரிக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும், இதனால், முஸ்லிம் மக்கள் கொதித்துப் போய் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம்களுக்காக ஒரு தனி நிர்வாக மாவட்டத்தை ஏற்படுத்துமாறு கோருவதை ஒரு தனி நாட்டுக் கோரிக்கையாகக் கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனையை மையமாகக் கொண்டு கரையோரமாக வாழும் முஸ்லிம்களுக்கான தனியான மாவட்டம் ஒன்றை ஏற்படுத்தும் முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கையை இலங்கை பிரதமர் தி.மு.ஜயரட்ண நிராகரித்தது குறித்து கருத்துக் கூறும் போதே ஹசன் அலி பி.பி.சி.யிடம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அம்பாறை முஸ்லிம்கள் தமது காரியங்களை தமது சொந்த மொழியிலேயே செய்துகொள்வதற்கு வசதியாக முஸ்லிம் காங்கிரஸினால், முன்வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கை ஒரு புதிய கோரிக்கை அல்ல என்று கூறியுள்ள அவர், கிழக்கு மாகாண ஆட்சியமைப்பதற்கான நிபந்தனையாகக் கூட இதனை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஏற்றிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to முஸ்லிம்களை தலிபான்களாகவும், அல்-கைதாக்களாகவும் பார்க்கும் நிலை உருவாகியுள்ளது: ஹசன் அலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com