தன்னைக் கொலை செய்ய வந்தவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு அளித்துள்ளார். அவ்வாறான நிலையில், இனங்களுக்கு இடையில் குரோதங்களை ஏற்படுத்தாமல் இருக்கவேண்டுமாயின், என் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தியவருக்கு உதவிய மொரிஸ் என்கிற நபருக்கும் பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், பிரதேச அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளதாவது, “உலகநாடுகள் பலவற்றில் யுத்தங்கள் இடம்பெற்றன. அந்த யுத்தத்தை வெற்றி கொண்டதன் பின்னர், அதன் கௌவரத்தை அந்நாட்டு ஆட்சியாளனோ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரோ பெற்றுக்கொள்வதற்கு முயலவில்லை. துப்பாக்கிச் சன்னத்துக்கு நெஞ்சைக் கொடுத்தவருக்கே கௌரவம் கொடுத்தனர். ஆனால், இங்கு அப்படி நடக்கவில்லை.
யாழ்ப்பாணத்தில், மண்டைத்தீவை 1990களில் தானே கைப்பற்றியதாக கோத்தபாய ராஜபக்ஷ கூறித்திரிகின்றார். அன்று, நானும் 350 பேர் அடங்கிய என்னுடைய படையணியும் இருந்திருக்காவிடின், படையில் பல உயிர்களை இழந்திருப்போம். என்னுடைய படையின் முயற்சியால், புலிகளின் 60 சடலங்களையும் ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் எம்மால் மீட்கமுடிந்தது. கோத்தபாய ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில், அடுத்தவனின் வெற்றிக்கு பெயர்போட்டுக் கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்.
இந்தமுறை யுத்தத்தில், கடந்த காலங்களைப் போல, நிலங்களைப் பிடிப்பதற்கு நாங்கள் முயலவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 35 ஆயிரம் பேரே இருந்தனர். அவர்களை முற்றாக அழித்தொழிக்க வேண்டும். அப்போதுதான் யுத்தம் நிறைவுக்கு வரும் என்று நினைத்தேன்.
ஓர் அங்குல நிலத்தைக் கூட விட்டுக்கொடுக்கமாட்டேன் என்று பிரபாகரன் கூறியமையால், எப்படியாவது எங்களை நோக்கி பயங்கரவாதிகள் வருவர் என்று எங்களுக்குத் தெரியும். வர வரத் தாக்கினோம். நாளொன்றுக்கு 14 அல்லது 15 பயங்கரவாதிகளைக் கொன்றோம். எங்களில், நான்கைந்து இராணுவத்தினரை இழந்தோம்.
யுத்தத்தை, ஐந்து படையணிகளை வைத்து, ஐந்து இடங்களிலிருந்து நகர்த்தினேன். கொஞ்சம் நாட்கள் செல்லச்செல்ல, யுத்தத்துக்கு எதிரான விமர்சனங்கள் கிளம்பின. வவுனியாவிலிருந்து முல்லைத்தீவுக்கு நேரடியாகச் சென்றால் என்ன என்று, கடற்படைத்தளபதி என்னிடம் கேட்டார். இது அவருடைய திட்டமல்ல என்பதை அப்போதே தெரிந்துகொண்டேன்.
முல்லைத்தீவுக்கு ஹெலியில் சென்று குண்டுகளை பொழிந்திருக்கலாம். ஆனால், திரும்பி வந்திருக்க முடியாது. என்னுடைய நோக்கத்தைப் போலவே, நந்திக்கடலில் யுத்தம் நிறைவடைந்தது.
தன்னைக் கொலை செய்ய வந்தவருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு அளித்துள்ளார். இவ்வாறான நிலையில், இனங்களுக்கு இடையில் குரோதங்களை ஏற்படுத்தாமல் இருக்கவேண்டுமாயின். என் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்திய தற்கொலைக் குண்டுதாரியை அழைத்துவந்த மொரிஸுக்கும், ஜனாதிபதி பொதுமன்னிப்பளிக்க வேண்டும்.
மொரிஸ், ஏழு வருடங்களாக சிறைவாசம் அனுபவிக்கின்றார். என்னுடன் சிறைச்சாலையில் இருந்தார். ஒரே பெஞ்சில் அமர்ந்திருந்து, இருவரும் கதைத்துக் கொண்டிருந்தோம்.
முழு இராணுவமுமே குற்றம் செய்யவில்லை. யாராவது செய்திருந்தால், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். அவ்வாறு நடத்துவதில் தப்பில்லை. யுத்தத்தில், 45 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்பது பொய்யாகும். இறுதி யுத்தம் இடம்பெற்ற கடைசி இரண்டொரு நாட்களில் 45 ஆயிரம் பேர் பலியாகியிருந்தால், அப்பகுதியில் உள்ள காணிகளை மண்வெட்டியால் கொத்தினால் மனித எலும்புகளே அகப்படும்.
யுத்தத்தின் இறுதிக்கட்ட நகர்வை, கொழும்பில் உள்ள இராணுவத் தலைமையகத்திலிருந்து நான் அவதானித்துக் கொண்டுதான் இருந்தேன். ஒருமுறை, புதுமாத்தளன் பகுதியில், புலிகள் சுமார் 900 பேரைப் புதைத்தனர். அவர்களுடைய புலிக்கொடியைப் போர்த்தி மரியாதை செலுத்தியே, அச்சடலங்களை அடக்கம் செய்தனர்
புதுக்குடியிருப்பு நோக்கி நகரப் போகின்றோம். ஆகையால் அப்பகுதியில் இருக்கும் மக்களை அகன்று செல்லுமாறு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் இரண்டு வாரங்களுக்கு முன்னரே அறிவித்துவிட்டுத்தான், புதுக்குடியிருப்பை நோக்கி நகர்ந்தோம். எனினும், எம்மால் வீசப்பட்ட ஏவுகணையொன்று புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில், தவறுதலாக விழுந்துவிட்டது.
யுத்தத்தின் போது காயமடைந்த பயங்கரவாதிகளுக்கும் இராணுவத்தினர் சிகிச்சையளித்துள்ளனர். பயங்கரவாதிகளில் 23,000 பேர் மரணித்துவிட்டனர். 12,000 பேரை உயிருடன் பிடித்தோம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரும் கரும்புலிகள் அமைப்பின் கட்டளைத் தளபதியுமான பொட்டு அம்மான் என்றழைக்கப்படும் சண்முகலிங்கம் சிவசங்கரன், இந்தியாவில் மறைந்திருக்க முடியாது. ஏனெனில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கில், இந்தியாவினால் தேடப்படும் முக்கிய புள்ளியாவார்.
அதாவது, நந்திக்கடலுக்கு, வடகிழக்கின் ஊடாக 2009ஆம் ஆண்டு மே 17ஆம் திகதியன்று, பொட்டு அம்மானும் பிரபாகரனும் தப்பிச்செல்ல முயன்றனர் என்று அவ்வமைப்பில் இருந்த கே.பி தெரிவித்துள்ளார். பிரபாகரன் திரும்பிவந்துவிட்டார், பொட்டு அம்மான் திரும்பவில்லை.
பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டிருந்தால், கொழும்பில் கே.பி தங்கியிருந்த வீட்டிலேயே அவரையும் தங்கவைத்திருப்பர். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதிக்கு முன்னர் பிரபாகரனை வடக்கு - கிழக்குக்கு முதலமைச்சராக முன்னைய ஆட்சியாளர்கள் ஆக்கியிருப்பார்கள்.” என்றுள்ளார்.

0 Responses to என் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்த ஒத்துழைத்தவருக்கும் பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும்: பொன்சேகா