ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிட முடியுமா என்பது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர்நீதிமன்றத்திடம் சட்ட ஆலோசனை கோருவதற்கு அரசியலமைப்பில் இடமில்லை என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அறிவித்துள்ளது.
பத்தரமுல்லையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸ்ஸநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இன்னொரு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே இழந்துள்ளார். இதுவொரு தனிப்பட்ட பிரச்சினையாகும். அரசியலமைப்பின் 18வது திருத்த சட்டத்துக்கு அமையவேனும் மீண்டும் அவர் போட்டியிட முடியாது. இதனால், இதுவொரு பொதுப் பிரச்சினையல்ல. இது தொடர்பில் நீதிமன்றத்திடம் கேட்பதற்கு அரசியலமைப்பில் இடமில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மஹிந்த நீதிமன்றத்திடம் சட்ட ஆலோசனையைக் கோர முடியாது: ஜே.வி.பி