நினைவுப் பேருரையொன்றை ஆற்றுவதற்காக இந்தியாவின் தமிழ்நாடு சென்றுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த ஊடகவியலாளர்களை சந்திக்க மறுத்து நேரடியாக விழா ஏற்பாட்டாளர்களுடன் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் சிவில் உரிமை கழகத் தலைவராக இருந்து மறைந்தவர் சட்டத்தரணி கே.ஜி.கண்ணபிரான். இவரது நினைவு சொற்பொழிவு சென்னை தியாகராயநகர் வித்யோதயா பள்ளியில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில், 'பாதுகாப்பையும் இறையாண்மையும் காத்தல்' என்ற தலைப்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் நினைவு சொற்பொழிவாற்றுகிறார். இது தனிப்பட்ட நிகழ்ச்சி என்பதால் வரும் 09.00 ஆம் திகதியன்றே சி.வி. விக்னேஸ்வரன் சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், திடீரென தனது பயணத்திட்டத்தை மாற்றிய சி.வி.விஸ்னேஸ்வரன். இன்றைக்கே சென்னை சென்று சேர்ந்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்ற பின் சி.வி.விக்னேஸ்வரன், இந்தியாவுக்கு செல்லும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இந்த விஜயத்தின் போது அவர் சென்னையிலேயே தங்கியிருப்பார் என்றும், உத்தியோகபூர்வ சந்திப்புக்கள் ஏதுவும் இடம்பெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to சி.வி.விக்னேஸ்வரன் இந்தியா பயணம்; சென்னை விமான நிலையத்தில் ஊடகங்களைச் சந்திக்க மறுப்பு!